Categories
மாவட்ட செய்திகள்

காணாமல் போன குளம்…. தேடிப் பிடித்த பொதுமக்கள்…. திருச்செந்தூர் அருகே ருசிகரம்….!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே பொதுமக்கள் சேர்ந்து குளங்களை புனரமைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவில் குறைந்துள்ளது. மேலும் கிடைக்கக்கூடிய சிறிதளவு நிலத்தடி நீரும் உப்புத்தன்மை அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் இந்த நீர் விவசாயத்திற்கு பயன்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிலை விவசாயம் நிலத்தடி நீர் மூலம் செழித்தோங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு விளையும் வெற்றிலை கடல் தாண்டி ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது காலப்போக்கில் தூர்வாரப்படாத குளங்கள் மற்றும் நீரின் வழித்தடங்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக நிலத்தடி நீர் வெறும் வாய் மொழியாக போனது.

இதனை அறிந்த சமூக செயல்பாட்டாளரான வாணி சரணின் “ஊர்கூடி ஊரணி காப்போம்” என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்கள் சேர்ந்து ஊர் குளத்தை தூர்வாரி உள்ளனர். மேலும் அந்த திட்டத்தில் வெற்றியும் கண்டுள்ளனர். முன்னதாக நிலத்தடி நீரை உறிஞ்சக்கூடிய கருவேலமரங்கள் தமிழக அரசின் ஒப்புதலுடன் வெட்டி சாய்க்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து மூன்று வருடங்களில் குளத்தை சீரமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வழித்தடங்களையும் புணரமைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சடயநேரி குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் தண்டுபத்து பகுதியிலுள்ள குலத்தை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |