காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமநகர் மார்சிங்பேட்டை போலீஸ் குடியிருப்பில் முத்துக்குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் உறையூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விமலாதேவி(21) என்ற மகள் உள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற விமலாதேவி மீண்டும் திரும்பி வரவில்லை.
இதனால் விமலாதேவியின் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் விமலாதேவியின் தாய் அமுதா பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விமலாதேவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.