Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காணாமல் போன சாலையை கண்டுபிடித்து தாங்க”…. வினோத புகார் கொடுத்த நபர்…. பரபரப்பு…..!!!!

சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியில் வசித்து வருபவர் குமார் (54). இவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது “சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலத்துக்குட்பட்ட கொரட்டூரிலுள்ள என்.ஆர்.எஸ் சாலை, சீனிவாசபுரம் மற்றும் கண்டிகை சாலைகள் தொடர்பாக தகவலறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டேன். அதற்கு அம்பத்தூர் செயற்பொறியாளர் சார்பாக பதில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அதாவது , அந்த சாலைகள் சென்ற பிப்ரவரி மாதம் போடப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆகவே போடாத சாலையை போட்டதாக கூறி மாநகராட்சி தரப்பில் வந்த பதிலை கண்டு அதிர்ச்சியடைந்தேன். எனவே அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து காணாமல்போன அந்த சாலையை கண்டுபிடித்து தரும்மாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். பின் இது தொடர்பாக மாநகராட்சியிடம் கேட்கும்மாறு குமாரை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |