Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமிகள்…. செல்போன் சிக்னலால் தெரிந்த உண்மை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

செங்கல் சூளையில் வேலை பார்த்த 3 சிறுமிகள் உட்பட 11 பேரை அதிகாரிகள் மீட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாரணபுரி மாவட்டத்தை சேர்ந்த 14 வயதிற்குட்பட்ட மூன்று சிறுமிகள் திடீரென காணாமல் போய்விட்டனர். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அந்த மாவட்ட போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து சிறுமிகளின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்திய போது, அவர்கள் கரூர் மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதனால் சத்தீஸ்கர் மாநில சமூக நல அலுவலர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

பின்னர் அந்த மாநில குழுவினருடன் சப் கலெக்டர் சைபுதீன், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் ஆகியோர் வீரராக்கியத்தில் இருக்கும் தனியார் செங்கல் சூளைக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது காணாமல் போன மூன்று சிறுமிகள் உட்பட 50 வட மாநில தொழிலாளர்கள் அங்கு வேலை பார்த்தது தெரியவந்தது. அந்த 3 சிறுமிகள் உட்பட 11 பேர் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். இதனால் 11 பேரையும் அதிகாரிகள் மீட்டு வெங்கமேட்டில் இருக்கும் தனியார் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |