சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பகுதியில் 14 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் சின்னா என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சின்னாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.