Categories
உலக செய்திகள்

காணாமல் போன சிறுமி!…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பிரித்தானியாவில் சோகம்….!!!

கடந்த சனிக்கிழமை பிரித்தானியா நாட்டின் வின்ட்ஸருக்கு அருகிலுள்ள (liquid leisure) நீர் பூங்காவில் காணாமல்போன 11 வயது சிறுமி நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு மாலை 4 மணிக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சுமார் 1 மணிநேரம் கழித்து சிறுமி கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எனினும் சிறுமி உயிர் பிழைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் இறப்பு தொடர்பாக சரியான காரணம் இதுவரையிலும் தெளிவாக தெரியாத நிலையில், அதுகுறித்த விசாரணையை காவல்துறையினர் தீவிரமாக நடத்தி வருகின்றனர். இது பற்றி கண்காணிப்பாளர் மைக்கேல் கிரீன்வுட் கூறிய கருத்தில், சிறுமி தண்ணீரில் மூழ்கி சீரமப்பட்ட சிறிதுநேரத்திலேயே பொதுமக்கள் சிறுமியை காப்பாற்ற ஏரிக்குள் குதித்தனர்.

இருந்தாலும் சிறுமியை கண்டறிய இயலவில்லை. இதில் உயிரிழந்த சிறுமி தன் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்தார் என தகவல் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் சிறுமியை கண்டுப்பிடிக்க காவல் துறை ஹெலிகாப்டர், ஏர் ஆம்புலன்ஸ் மற்றும் படகுதேடுதல் போன்றவற்றை பயன்படுத்தினார்கள். இது பற்றி சிறுமியின்  குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |