கனடாவில் காணாமல் போன சிரிப்பு தொடர்பான தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
கனடாவில் ரொறன்ரோ பகுதியை சேர்ந்த தரணிதா ஹரிதரன்(16) என்ற தமிழ் சிறுமி கடந்த வியாழக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் இந்த சிறுமி தொடர்பான தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.அதில் தரணிதா கடைசியாக தப்ஸ்கோட் சாலை மற்றும் மெக்லிவன் அவென்யூ பகுதி சாலை வழியாக சென்றார் என தெரிவித்துள்ளனர்.
தரணிதா ஒல்லியாக இருப்பார் என்றும் அவரின் உயரம் 5 அடி 5 அங்குலம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் இடதுகையில் பச்சை குத்தி இருப்பார் என்றும் அவர் இந்த நிற உடையை அணிந்து இருந்தார் என்றும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இதனை தொடந்து தரணிகா குறித்த விவரம் தெரிந்தால் உடனடியாக காவல்துறையினரை அணுக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.