சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 29-ஆம் திடீரென காணாமல் போய்விட்டார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மகாலிங்கபுரத்தில் சேர்ந்த ஓட்டுநரான சிவக்குமார் பொள்ளாச்சியில் இருக்கும் ஒரு துணிக்கடைக்கு சென்ற போது அவருக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.
இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிவகுமார் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிவகுமாரை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.