Categories
உலக செய்திகள்

காணாமல் போன சிறுவன்…. மகனை காண துடிக்கும் தாய்…. போலீசார் கூறிய அதிர்ச்சி தகவல்….!!

லண்டனில் காணாமல் போன சிறுவனின் உடல் நதிக்கரையில் கிடப்பதாக தகவல் வெளியாகி பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

லண்டனில் Ladbroke Grove பகுதியை சேர்ந்த RichardOkorogheye சிறுவன் பல வாரங்களாக காணவில்லை என்று காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் Epping நதிக்கரையில் சடலமொன்று கிடப்பதாகவும் அது காணாமல் போன சிறுவனாக இருக்கும் என்று காவல்துறையினர் நம்புகின்றனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஏப்ரல் 4ஆம் தேதி Epping Forest பகுதியில் உள்ள நதிக்கரையில் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனை உறுதி செய்ய RichardOkorogheye உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். காணாமல் போன சிறுவன் கடந்த மார்ச் 22ஆம் தேதி லண்டன் Ladbroke Grove பகுதியிலுள்ள தன் வீட்டை விட்டு சென்றுள்ளார். அவர் கடைசியாக 23ஆம் தேதி Epping Forest பகுதி நோக்கி நடந்து செல்வதை சிசிடிவி மூலம் காண முடிகிறது. எனவே இது சிறுவனாக இருக்கக்கூடும் என எங்கள் தரப்பில் நம்பப்படுகிறது” என கூறியுள்ளார்.

இந்நிலையில் RichardOkorogheye தாயார் தன் மகன் எங்கு இருக்கிறான் என்ற தகவலுக்காக காத்திருப்பதாகவும், அங்கு தான் செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் RichardOkorogheye ஒரு உயிரனு நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் ரத்த மாற்றத்திற்காக மட்டுமே மருத்துவமனைக்கு செல்வார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே கண்டுபிடிக்கப்பட்டுள்ள சடலம் RichardOkorogheye தானா என்பது அவரது குடுபத்தினர் உறுதிப்படுத்திய பின்னரே தெரியும் என்பது குறிப்பிடதக்கது.

Categories

Tech |