Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காணாமல் போன சுற்றுலா வேன்…. குறுந்தகவல் வந்ததால் சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!

சுற்றுலா வேனை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யக்கொண்டான் திருமலை ரங்க நகர் பகுதியில் மோகனசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 2-ஆம் தேதி மோகனசுந்தரம் தனக்கு சொந்தமான சுற்றுலா வேனை திருச்சி ஜங்சன் பகுதியில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வேன் காணாமல் போனதை கண்டு மோகனசுந்தரம் அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் வேனை திருடி சென்ற மர்ம நபர் டோல்கேட் வழியாக செல்லும்போது நுழைவு கட்டணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தி மோகனசுந்தரத்தின் செல்போன் எண்ணிற்கு வந்துள்ளது. இதுகுறித்து மோகனசுந்தரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திண்டிவனம் அருகே இருக்கும் டோல்கேட் பகுதியில் சுற்றுலா வேனை மீட்டனர். மேலும் வேனை திருடிய குற்றத்திற்காக செந்தில் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |