காணாமல் போன தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள உடப்பன்பட்டியில் கூலித் தொழிலாளியான அழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற அழகன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அழகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதனை அடுத்து நேற்று அப்பகுதியில் இருக்கும் கண்மாயில் அழகரின் சடலம் மிதப்பதாக பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு அழகரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.