வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போந்தை கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 5 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் ஏழுமலை தனது மனைவியுடன் போந்தை கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஏழுமலை தனது மனைவியுடன் கடந்த 24-ஆம் தேதி திருவண்ணாமலையில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.85 ஆயிரம் மற்றும் 5 பவுன் நகை ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஏழுமலை தானிப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.