காணாமல் போன புதுமாப்பிள்ளையை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா ராயபுரத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் மோகனப்பிரியா என்ற பெண்ணை மணிகண்டன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த மணிகண்டன் திடீரென காணாமல் போய் விட்டார். இதனை அடுத்து மணிகண்டனை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர்.