கனடாவில் காணாமல் போன இளம்பெண் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் மன்பிரீத் கவூர். கடந்த 13ம் தேதியிலிருந்து இவரை காணவில்லை. இந்நிலையில் விக்டோரியா பார்க் ஏவி என்ற பகுதியில் கடந்த 13ம் தேதி மாலையில் அவர் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அவர் காணாமல் போன அன்று உடுத்தி இருந்த ஆடை மற்றும் அவரது உயரம் போன்ற விவரங்கள் வெளியிடப்பட்டடிருந்தன.
மேலும் இவரை கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் இது தொடர்பாக தங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றனர்.