இளம்பெண் ஒருவர் காணாமல் போன நிலையில் ஆறு சடலங்களுடன் குழிக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார்
மெக்சிகோவை சேர்ந்த எஸ்ஸினா என்ற பெண் காணாமல் போயுள்ளார். இதனால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் அவர் காணாமல் போகவில்லை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சமயம் அவர் நான்கு பேரால் கடத்தப்பட்டுள்ளார். இதனிடையே காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் ஓர் இடத்தில குழி தோன்டியுள்ளனர். அதனுள்ளே 7 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட உள்ளது. அதில் மூன்று பெண்கள் என்றும் மூன்று ஆண்கள் என்றும் தெரிய வந்துள்ளது. ஒரு சடலம் ஆணா பெண்ணா என்பது இதுவரை அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது.
உடல்கள் யாருடையது என்பதை விசாரிக்கையில் ஒரு உடல் காணாமல் போன எஸ்ஸினா உடல் என அவரது பெற்றோர்கள் அடையாளம் காட்டினர். அதோடு டிஎன்ஏ பரிசோதனையிலும் அது எஸ்ஸினா தான் என்பது உறுதியாகியது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் எஸ்ஸினா கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்றும் அவருடன் இருந்த மற்ற ஆறு சடலங்கள் யாருடையது என காவல்துறையினர் தீவிர விசாரணை தொடர்ந்து வருகின்றனர்.