மின் ஒயர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் அருகே கொங்காரம்பாளையம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருக்கும் தோட்டத்தில் மின் ஒயர் வாங்கி வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூபாய் 5,000 இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் என்பவர் இந்த மின் ஒயர்களை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து பாலமுருகன் வளவனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.