மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாகசமுத்திரம் பகுதியில் சிவராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிபி என்ற மகன் உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவியை சிபி காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சிபி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சிபியை போலீசார் கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.