மடிக்கணினி திருடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒண்டிப்புதூர் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் தொழில் தொடர்பான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சிவகுமாரின் நிறுவனத்தில் இருந்த 2 மடிக்கணினிகள் கானாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சிவக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இம்ரான் என்பவர் மடிக்கணினியை திருடியது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் இம்ரானை தீவிரமாக தேடி வருகின்றனர்.