மாட்டை திருடிய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் விவசாயியான பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் நிலத்தில் தனது மாடுகளை மேய்த்து விட்டு பிரபு கொட்டகையில் அடைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை ஒரு மாடு காணாமல் போனதை கண்டு பிரபு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பிரபு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஜெய்சங்கர், ஜெபஸ்டின் ஆகிய 2 பேரும் இணைந்து மாட்டை திருடி சந்தையில் விற்க முயன்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, மாட்டை பத்திரமாக மீட்டனர்.