Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன ஸ்கூட்டர்…. பட்டதாரி கைது….. போலீஸ் அதிரடி….!!

ஸ்கூட்டரை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் அருகே சரல்விளை பகுதியில் ஜெபர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவர் சரல்விளை பகுதியில் இருக்கும் ஒரு கால்வாயில் குளிப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அவர் குளித்து விட்டு திரும்பி வந்து பார்க்கும் போது கரையில் நின்ற ஸ்கூட்டரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெபர்சன் கொற்றிக்கோடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த விசாரணையின் போது பனவிளை பகுதியைச் சேர்ந்த ஜெங்கின்ஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா காலத்தில் வேலை இல்லை என்பதால் பல இடங்களில் வேலை தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் வேலை கிடைக்காததால் ஜெங்கின்ஸ் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் இவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெங்கின்ஸ் வேறு எதுவும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஹ

Categories

Tech |