Categories
உலக செய்திகள்

காணாமல் போன 100 ஷூக்கள்…. கையும் களவுமாக சிக்கிய திருடன்…. அதிர்ச்சியடைந்த மக்கள்…!!

ஜெர்மனியில் நூற்றுக்கும் மேலான ஷூக்கள் மாயமான நிலையில் திருடன் யார் எனத் தெரிந்தபோது மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள்.

ஜெர்மனியில் பெர்லினுக்கு அருகில் இருக்கின்ற Zehlendorf பகுதியில் ஷூக்கள் தொடர்ந்து காணாமல் போனது. வீடுகளுக்கு வெளியே ஷூக்களை கழட்டி விட்டால் அவை உடனடியாக காணாமல் போய்விடும். யார் அந்த ஷூ திருடன் என மக்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்த நிலையில், Christian Meyer என்ற நபர் ஷூக்கள் மாயமாகும் மர்மத்தினை கண்டறிந்துள்ளார். அவர் ஒரு நாள் ஓடுவதற்கு தான் பயன்படுத்தக்கூடிய ஷூக்கள் காணாமல் போனதை உணர்ந்து, அப்பகுதியில் இருக்கின்ற மக்கள் பயன்படுத்த கூடிய அறிவிப்பு பலகையில் தனது ஷூக்கள் காணாமல் போய்விட்டதாக எழுதி வைத்துள்ளார். பின்னர் தான் அவருக்கு தெரிந்தது, மாயமானது தன்னுடைய ஷூக்கள் மட்டும் இல்லை அப்பகுதியில் இருக்கின்ற மக்களின் 100 ஷூக்கள் வரை காணாமல் போய் இருப்பதாக அவர் அறிந்தார்.

இதனை தொடர்ந்து அந்த ஷூ திருடனை கண்டுபிடிப்பதற்கு கவனமாக காத்திருந்தார் Meyer. இதனைத்தொடர்ந்து ஒரு நாள் திருடன் கையும் களவுமாக சிக்கிக்கொண்டான். இன்னர் ஒரு ஜோடி ஷூக்களுடன் திருடன் சிக்கியுள்ளார் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். பிடிபட்ட திருடன், ஷூக்கள் திருடும் போது கையும் களவுமாக சிக்கிக் கொண்டது மனிதன் இல்லை,அது ஒரு நரி.. அதன் பின்னர் அந்த நரி ஷூக்கள் அனைத்தையும் மறைத்து வைத்திருந்த இடத்தை கண்டறிந்து மக்களுடைய ஷூக்கள் சிலவற்றை கைப்பற்றினார். இருந்தாலும் Meyer இன் ஷூக்கள் மட்டும் கிடைக்கவில்லை.

Categories

Tech |