ஈரோடு மாவட்டத்திலுள்ள பகுடுதுறை பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தனர். அப்போது தொட்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான பாரதி என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு அவரது தாத்தா வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 15 வயதுடைய எனது மகளை திருமணம் செய்து பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் பாரதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.