மேற்குவங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் மோல்டங்கா என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஐந்து வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனான். இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். சிறுவன் காணாமல் போனதில் இருந்தே அந்த கிராமத்தில் பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில் சிறுவனின் பக்கத்து வீட்டில் இருந்து திங்கட்கிழமை இரவு முதல் துர்நாற்றம் வீசியது பற்றி கிராம மக்கள் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அன்று அந்த வீட்டிற்கு வந்த காவல்துறையினர் வீட்டின் பரன்மேல் பாலித்தீன் பை சுற்றிய நிலையில் சிறுவனின் உடலை கண்டெடுத்திருந்தனர். உடனடியாக சிறுவனின் உடல் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த வீட்டில் வசித்து வந்த பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிறுவனின் உறவினர்கள் உட்பட கிராமத்தினர் அந்த பெண்ணின் வீட்டை சூறையாடியதால் அந்த பகுதியில் வன்முறை வெடித்துள்ளது. மேலும் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். சிறுவனின் மரணத்திற்கு காரணம் என்ன இந்த தற்கொலையின் பின்னணியில் இருக்கும் பகை என்ன என்பது பற்றியும் விசாரணை முடிக்க விடப்பட்டிருக்கிறது.