Categories
உலக செய்திகள்

”காணாமல் போன 50,00,000 சீனர்கள்” அதிர்ச்சியில் உலகம் …!!

கொரானோ வைரஸ் பாதித்த வுகாண் மாகாணத்தில் இருந்து 5 மில்லியன் மக்கள் மயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கொரானோ வைரஸினால் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ள சீனாவின் வுகான் மாகாணத்தில் வாழ்ந்து வந்த சுமார் 5 மில்லியன் சீனர்கள் தீடிரென மாயமாகி விட்டதாக வுகாண் மாகாண அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சர்வதேச ஊடகமான ஏபி செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கொரானோ வைரஸ் வுகாண் மாகாணத்தில் மிக வேகமாக பரவி , பல நூறு பேரை கொன்றுள்ளது. பல்லாயிரம் மக்களுக்கு பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து வுகாண் மாகாண எல்லைகளை மூடியது சீனா.

கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி சீனாவின் வுகாண் மாகாண எல்லைகளை மூடினார்கள் சீன அதிகாரிகள். ஆனால் அதற்கு முன்னரே சுமார் 5 மில்லியன் பேர் வுகாண் மாகாணத்தில் இருந்து மாயமாகியுள்ளதாக தற்போது அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மாயமானவர்கள் காடுகள் , கிராமங்கள் வழியாக வுகாண் மாகாணத்தில் இருந்து வெளியேறி அயல் மாநிலங்களுக்கும் , சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும் சென்று இருக்கலாம் என்று கூறுகின்றது சீனாவின் வுகாண் நகராட்சி அலுவலகம்.

இவ்வாறு வெளியேறிய 5 மில்லியன் மக்களும் கொரானோ பாதிப்புக்கு நேரடியாக உள்ளாகாமல் இருந்தாலும் அவர்களின் வழியாக கொரானோ கிருமிகள் வேறு மாநிலங்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது சீன நாட்டின் சுகாதாரத்துறை. சீனாவின் வுகாண் மாகாணம் என்பது மொத்தம் 38 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு பிரதேசமாகும்.

கொரானோ வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாமல் விட்டால் இத்தனை பேரின் நிலை கேள்விக்குறியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படியிருக்க அந்த மாகாணத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகின்ற 5 மில்லியன் மக்களுக்கும் கொரானோ வைரஸ் பாதிப்பு அறிகுறி உறுதி செய்யப்பட்டால் ஒட்டுமொத்த சீனாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாயம் காணப்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

Categories

Tech |