Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“காணாமல் போன 65 செல்போன்கள், 5.5 லட்சம்”…. மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் போலீசார்….!!!!!

சைபர் கிரைம் போலீசார் காணாமல் போன செல்போன்கள் மற்றும் பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சென்ற மே மாதம் முதல் 130 ஸ்மார்ட் செல்போன்கள் காணாமல் போனது. மேலும் இணையதளம் மூலம் பண மோசடி நடந்ததாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து பெரம்பலூர் சைபர் க்ரைம் போலீசார் குழு அமைத்து மீட்பு வேட்டையில் ஈடுபட்டார்கள்.

இந்த நிலையில் காணாமல் போன 4 லட்சம் மதிப்பிலான 65 செல்போன்களும் இணையதள மோசடியில் இழந்த பணம் ரூபாய் 5 லட்சத்து 43 ஆயிரத்து 500 ஐயும் மீட்டார்கள். இந்த நிலையில் இதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வானது பெரம்பலூர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மீட்கப்பட்டதை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் இணையம் மூலம் நடைப்பெரும் பண மோசடி பற்றி கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணான 1930 இன்று எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம். மேலும் சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் கொடுக்கலாம் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |