நெல்லையில் மர்மநபர்கள் கோவில்களினுள் புகுந்து உண்டியலில் இருக்கும் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடியில் செங்குளம், இடைகால் கபாலிப்பாறை உள்ளிட்ட இடங்களில் மெயின் சாலையில் பச்சைசாத்து மாடன்கோவில், வன்னாரமாடன் கோவில், புதுக்குளம் சுடலைமாடசுவாமி உட்பட 5 கோவில்கள் அமைந்துள்ளது. இந்த 5 கோவில்களிலும் மர்ம நபர்கள் புகுந்து கோவிலில் இருந்த உண்டியலை உடைத்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த பணத்தையும் திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து செங்குளத்தில் அமைந்திருக்கும் பத்துமாடசுவாமி கோவிலினுள் இருந்த உண்டியலில் போடப்பட்டிருந்த காணிக்கையை திருடிவிட்டு உண்டியலை ஊருக்கு புறமாக அமைந்திருக்கும் காட்டுப்பகுதியில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கபாலிபாறையில் அமைந்திருக்கும் கோவிலினுள் உள்ள உண்டியலை உடைக்கும் போது காவல்துறையினர் அந்த வழியாக ரோந்தில் ஈடுபட்டயதை கண்ட மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாப்பாகுடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.