Categories
தேசிய செய்திகள்

போதை வலையில் இளைஞர்கள்….. 12 மணி நேரம் வரை போதை மயக்கம்….. பகீர் சம்பவம்……..!!!!

தற்போது பல இளைஞர்கள் மது, புகையிலை மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் இவற்றை விட மோசமான விஷயம் ஒன்று தற்போது இணைந்துள்ளது.விதவிதமான வாசனைகள் கொண்ட காண்டம் மூலம் வாலிபர்கள் போதைக்கு அடிமையாகும் அதிர்ச்சி தகவல் வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது. காண்டம் என்பது உடலுறவின் போது கருத்தடைக்காக பயன்படுத்துவது.

ஆனால் இதை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து பத்து முதல் 12 மணி நேரம் வரை போதையிலேயே வாலிபர்கள் மிதக்கின்றன. இந்த சம்பவம் மேற்கு வங்கம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் துர்காப்பூர் சிட்டி சென்டர் ,பிரதான நகர் பெனாசிட்டி மற்றும் முச்சிப்பாரா, சி மண்டலம், ஏ மண்டலம் போன்ற பகுதிகளில் நறுமண காண்டமங்களுக்கு திடீர் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல மருந்து கடைகளை முற்றுகையிட்டு மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் என அனைவரும் காண்டம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

இதனைத் தொடர்ந்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகிறது .இந்த காண்டங்களை சூடான நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்தால் 12 மணி நேரம் வரை போதை மயக்கத்திலையே இருக்கலாம் என அவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறும்போது,காண்டங்களில் உள்ள நறுமண கலவைகள் உடைந்து மதுவை உருவாக்குகிறது. அதை போதைப் பொருள் என கூறியுள்ளனர்.. இருந்தாலும் இது மிகவும் ஆபத்தானது.இதன் விளைவுகளை உணராமல் இளைஞர்கள் இதற்கு அடிமையாவது பேராபத்தில் முடியலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |