கர்நாடகாபெலகாவி மாவட்டத்திலுள்ள இந்தலகா கிராமத்தில் காண்டிராக்டர் சந்தோஷ் பாட்டீல் வசித்து வந்தார். மேலும் ஆளும் பா.ஜ.க. தொண்டராகவும் இருந்துள்ளார். சென்ற வாரம் இவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். இதையடுத்து பாட்டீலின் போனை ஆய்வு மேற்கொண்டு காவல்துறையினர் விசாரித்து வந்த சூழ்நிலையில், உடுப்பி நகரில் கர்நாடக அரசு போக்குவரத்துகழக பேருந்து நிலையம் அருகில் சாம்பவி லாட்ஜில் அவர் மரணமடைந்து கிடந்தது தெரியவந்தது. இதற்கிடையில் பொதுப்பணி துறையில் ஒப்புதல் வழங்கிய பணிக்காக பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறை மந்திரியான கே.எஸ். ஈசுவரப்பா தன்னிடம் 40 % லஞ்ச பணம் கேட்டார் என கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் அதிரடி குற்றச்சாட்டை கூறினார்.
இந்நிலையில் சந்தோஷ் பாட்டீலின் திடீரென்று மரணமடைந்தது கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்வவதற்கு முன் குறிப்பு ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அந்த குறிப்பு சமூகஊடகங்களில் வெளிவந்துள்ளது. அவற்றில் தன் மரணத்திற்கு ஈசுவரப்பா காரணம் என குறிப்பிட்டுள்ளார். தன் கனவை தூரவைத்து விட்டு வாழ்வை முடித்து கொள்ள முடிவு செய்துள்ளேன் என அதில் அவர் எழுதியுள்ளார். முடிவில் அந்தகுறிப்பில் பா.ஜ.க. தொண்டரான சந்தோஷ், தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உதவிடும்படி, முன்னாள் முதல்-மந்திரி பி.எஸ். எடியூரப்பா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் பிரதமர்நரேந்திர மோடி போன்றோரிடம் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சந்தோஷ் பாட்டீல் யார் என்றே எனக்கு தெரியாது என மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார். மேலும் அவர் என்ன காரத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது எனக்கு தெரியாது. நான் யாரிடமும் கமிஷன் கேட்கவும் இல்லை, என் மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதும் இல்லை. இதுகுறித்து முழு விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதுவரையிலும் நான் மந்திரி பதவியில் நீடிப்பேன் என்று அவர் தெரிவித்தார். ஆனால் ஈசுவரப்பாவை மந்திரி பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
அதனை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே. சிவக்குமார் தலைமையில் அந்த கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியதாவது, போராட்டம் நடத்துவதற்கு காங்கிரசுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. இதில் ஊழலின் பிறப்பிடமே காங்கிரஸ் தான். பாட்டீலின் பிரேத பரிசோதனை நடந்து முடிந்து அது பற்றிய அறிக்கை வரும். அதன்படி நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என தெரிவித்தார். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்ததலைவர் சிவக்குமார் கூறியதாவது, ஊழல் மந்திரியை காப்பாற்ற கர்நாடக முதல்-மந்திரி விரும்புகிறார். இந்த ஒட்டுமொத்தம் நடைமுறையில் அவருக்கும் பங்குள்ளது என நான் கருதுகிறேன்.
பாஜக மற்றும் தன் அரசை காப்பாற்ற வேண்டும் என அவர் (பசவராஜ்) விரும்பினால், உடனே ஈசுவரப்பா மீது கைது நடவடிக்கை எடுத்து, ஊழல் வழக்கு ஒன்றை பதிவுசெய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிலையில் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தபோது “மந்திரி ஈசுவரப்பா பதவி விலக முடிவு செய்துள்ளார். இது அவரது சொந்த முடிவு ஆகும். பதவி விலகலுக்கான கடிதத்தினை இன்று மாலை அவர் வழங்கவுள்ளார். இதனால் எதிர்க்கட்சிகள் ஒரு புலனாய்வு அதிகாரியாகவோ (அல்லது) நீதிபதியாகவோ ஆக வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் விசாரணைக்கு பின் அனைத்து விஷயங்களும் வெளியே வரும் என்று தெரிவித்துள்ளார்.