மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கக்கனூர் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் உதயகுமார் என்பவரும் உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்றுள்ளனர். இவர்கள் காதணி விழாவில் கலந்துகொண்டு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது கெடார் அருகில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பாலத்தின் மீது மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த வாலிபர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் உதயகுமாருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தது. ஆனால் பாலகிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.