Categories
தேசிய செய்திகள்

காதலனுக்காக பெற்ற தாயிடமே கைவரிசை…. மகள் செய்த காரியத்தால் அதிர்ச்சி….!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ரத்தனம்மா என்பவருக்கு தீப்தி என்ற மகள் இருக்கிறார். இவருக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டிலேயே வசித்து வருகின்றார். இந்நிலையில் ரத்தனம்மா வீட்டில் இருந்த ஒரு கிலோ அளவிலான பாரம்பரிய நகைகள் திடீரென மாயமாகி உள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தீப்தியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. தீப்தி, மதன் என்பவரிடம் கார் ஓட்ட பயிற்சி பெற்று வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீப்தி வீட்டில் ஏராளமான நகைகள் இருப்பதை தெரிந்து கொண்ட மதன்,அதனை எடுத்து வந்தால் நாம் வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்று கூறியுள்ளார். அதனால் தீப்தி, வீட்டில் இருந்த அனைத்து நகைகளையும் எடுத்து வந்து மதனிடம் கொடுத்துள்ளார்.

அந்த நகைகளை வைத்துக் கொண்டு அண்மையில் மூன்று கார்களையும் அதன் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் அந்த கார்களை தீப்தி பரிசாக வழங்கியதாக போலீசாரிடம் மதன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலனுக்காக சொந்த வீட்டிலேயே தங்க நகைகளை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |