இளம் பெண்ணின் போட்டோவை மாப்பிங் செய்து நிர்வாணமாக்கி இணையதளத்தில் பதிவிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த திருமணமான இளம் பெண்ணின் புகைப்படம் ஒன்று நிர்வாணமாக பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் மார்பிங் செய்து பதிவிடப்பட்டிருந்தது. இதைப்பார்த்த அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் கணவர் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் அதனை பதிவேற்றம் செய்த எண்ணை கொண்டு விசாரணை செய்தனர். அப்போது இந்த சம்பவத்தை செய்தது விபின் ஜோசப் என்பது தெரியவந்தது. பிறகு அவரை பிடித்து விசாரணை செய்ததில் சௌமியா என்ற இளம்பெண் கூறியதன் பெயரில் இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.
பிறகு சௌமியாவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது தான் காதலித்த நபரை அந்தப் பெண் திருமணம் செய்ததால் அவரை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் கூறினார். சௌமியா தனியார் ஹோமியோபதி கிளினிக்கில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சமூக வலைதளத்தின் மூலம்
விபின் ஜோசப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது முன்னாள் காதலனுக்கு திருமணமானதை ஏற்றுக்கொள்ள முடியாத சௌமியா போலி அக்கவுண்ட் ஓபன் செய்து விபின் ஜோசபை வைத்து மார்பிங் செய்த போட்டோவை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.