Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதலனுக்கு நிச்சயம் செய்த பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அய்யனாபுரம் தெற்கு தெருவில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அப்பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முனீஸ்வரனின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் பேசி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் காதலி இறந்த துக்கத்தில் முனீஸ்வரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |