Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காதலனுடன் இளம்பெண் ஓட்டம் …. பெண் வீட்டாரின் வெறியாட்டம்…. சாயல்குடியில் பரபரப்பு…!!

காதலனுடன் சென்ற பெண்ணின் குடும்பத்தார் காதலனின் வீட்டை சூறையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரிய குளம் கிராமத்தில் வசிப்பவர் ரம்யா பிரபா. இவர் வேறு ஒரு சமூகத்தைச் சார்ந்த இளைஞரான குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள புறப்பட்டுள்ளனர். இதை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் ரம்யாவின் காதலனான குமாரின் வீட்டை இடித்து சூறையாடியுள்ளனர்.

அதுமட்டுமின்றி வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் 8 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் நான்கு சக்கர வாகனங்களும் சேதமடைந்துள்ளன. மேலும் ஒரு குடிசை வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாயல்குடி காவல்துறையினர் தப்பியோடிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |