வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகரில் நாகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதுரைமுத்து என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக நிச்சயிக்கப்பட்ட பெண் அவரது காதலனுடன் ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த மதுரை முத்து வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலை ஓர மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.