புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்களூர் பக்கம் போரம் கிராமத்தில் பாண்டிதுரை(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் நந்தினி(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு திருப்பூரில் வேலை பார்த்தபோது ஒரு வாலிபருடன் நந்தினிக்கு காதல் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த நந்தினியின் பெற்றோர் அவரை பாண்டித்துரைக்கு திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்திற்கு பிறகு அந்த வாலிபருடன் தொடர்பில் இருந்த நந்தினியை பாண்டித்துரை கண்டித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நந்தினி தனது கணவரை கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நந்தினியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் நந்தினிக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.