காதலனை அண்ணன் தாக்கியதால் தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது வீட்டிற்கு செல்லும்போது தனது காதலனுடன் நடந்து சென்றுள்ளார். இதனைப் பார்த்த மாணவியின் அண்ணன் தனது நண்பர்கள் நான்கு பேரை அழைத்துக்கொண்டு மாணவியின் காதலனை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த காதலன் பொகவந்தலாவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதோடு மாணவியை அவரது அண்ணன் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டில் இருந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்து உறவினர்கள் மருத்துவம்மனைக்கு கொண்டு சென்றபோது போகும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைதொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்கையில் மேற்குறிப்பிட்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.
மாணவியின் காதலனை தாக்கியதாக சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் 4 போரையும் ஜாமினில் விடுவித்தனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த மாணவியின் காதலன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருப்பதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.