ஐந்து வருடங்களாக காதலித்து வந்த காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை அருகே பாரதி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த டேனியல் ராஜா என்பவரின் மகள் ஏஞ்சல். இவர் மாதவரம் ரவுண்டானாவில் இருக்கும் தனியார் மார்க்கெட்டில் வேலை செய்து வந்திருக்கின்றார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பவரை சென்ற ஆறு வருடங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்ததாக தெரிகின்றது. இந்த நிலையில் தனுஷ் ஏஞ்சலை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார்.
காதல் தோல்வியால் விரக்தி அடைந்த ஏஞ்சல் சென்ற ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் புடவையால் தூக்கிப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஏஞ்சலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் ஏஞ்சல் தற்கொலைக்கு முன்பாக தனது செல்போனில் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அதில் தன்னுடைய தற்கொலைக்கு நானே காரணம். காதல் தோல்வியால் தனது காதலனை மறக்க முடியவில்லை. அதனால் தான் நான் இந்த முடிவை எடுத்து இருக்கின்றேன். இதற்காக தனது காதலனை ஒன்றும் செய்ய வேண்டாம் என கூறியிருக்கின்றார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனிடையே ஏஞ்சலின் பெற்றோர்கள் தங்களின் மகளின் தற்கொலைக்கு காரணமான தனுஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் கொடுத்துள்ளார்கள்.