Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதலனை கரம்பிடிக்க இருந்த நிலையில்…. சிதைந்து போன கல்லூரி மாணவியின் வாழ்க்கை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம்படுகை அருகே இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிடைத்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சிதைந்த நிலையில் கிடந்த இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் வல்லம்படுகை மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் கணேசமூர்த்தியின் மகள் கிருத்திகா(19) என்பது தெரியவந்தது.

இவர் தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கிருத்திகாவும் கார்த்தி என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு விட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கார்த்தியின் தாய்க்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கார்த்தியின் தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்; நீயும் அங்கு சென்று கஷ்டப்பட போகிறாயா? எனக்கூறி கணேசமூர்த்தி திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் என்ன செய்வது என்று அறியாமல் மன உளைச்சலில் கிருத்திகா திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக கார்த்தியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட கிருத்திகா தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கார்த்தி தனது காதலியை சமாதானப்படுத்தி நாம் விரைவில் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழலாம் என அறிவுரை வழங்கியுள்ளார். அதனை ஏற்காமல் கிருத்திகா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Categories

Tech |