தனது காதலனை கொன்ற நபரிடம் காதலி நகைச்சுவையாக பேசியதற்கு நீதிமன்றம் கேள்விகளை கேட்டு தாக்கியுள்ளது.
பிரிட்டனை சேர்ந்த சிம்ரன் என்பவரது காதலன் ஹசன் குத்துச்சண்டை வீரர் எல்விஸ் என்பவருடன் சண்டையிட்டுள்ளார். அப்போது எல்விஸ் தாக்கியதில் ஹஸன் கோமாவிற்கு சென்றார். தனது காதலன் கோமாவில் இருந்த சமயம் சிம்ரன் ஹாசனை தாக்கிய எல்விஸ்க்கு தனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகின்றது என பல குறுஞ்செய்திகளை அனுப்பி இருந்தார். இதனிடையே ஹசன் கோமாவில் இருந்து விடுபடாமல் உயிரிழக்க எல்விஸ் மீது கொலைக்குற்றம் பதியப்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் எல்விஸ் மற்றும் சிம்ரன் பேசிய குறுஞ்செய்திகள் குறித்து நீதிமன்றம் கேள்விகளை கேட்கத் தொடங்கியது. உனது காதலன் தாக்கப்பட்டு கோமாவில் இருக்கிறார் ஆனால் எப்படி உன்னால் காதலனை தாக்கியவரிடம் நகைச்சுவை கலந்த குறுஞ்செய்திகள் அனுப்ப முடிகின்றது என நீதிபதி கேட்டுள்ளார். அதற்கு அனைத்தும் சரியாகிவிடும் ஹசன் குணமடைந்துவிடுவார் என்று நினைத்துதான் அவ்வாறு குறுஞ்செய்திகள் அனுப்பியதாக சிம்ரன் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு நீதிபதி சிம்ரனிடம் என்ன விஷயம் உங்களை சிரிக்க வைத்தது என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சிம்ரன் எல்விஸ் மற்றும் ஹசனை ஒன்றாக நிறுத்தினால் ஹாசன் மிகவும் குட்டியாக இருப்பார் அவர் எல்விஸிடம் சண்டை போட்டது வேடிக்கையாக இருந்தது. அதனால்தான் சிரிப்பு வந்தது எனக் கூறினார். சிம்ரன் மற்றும் ஹஸன் இடையே பிரச்சனை வர காரணம் எல்விஸ். ஹசனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறியதனால்தான்.
சிம்ரன் கூறுகையில் ஹசன் கோமாவில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது. அவர் குணமடைந்து வந்திருந்தாலும் அவர் என்னுடன் பழகமாட்டார் என நினைத்தேன் என்று கூறியுள்ளார். அடுத்ததாக நீதிபதி சிம்ரனிடம் எனது காதலன் தேவதைகளுடன் வாழ போகின்றான் என அனுப்பியதற்கு காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு நகைச்சுவையாக தான் அனுப்பினேன் ஆனால் அது நல்ல நகைச்சுவை இல்லை எனக் கூறினார்.
அதன்பிறகு எல்விஸ் அனுப்பிய குறுஞ்செய்தியை குறிப்பிட்டு ஒருவரை கொன்ற பிறகு எப்படி என்னால் நன்றாக வாழ முடியும் என்பது தெரியவில்லை. அதற்கு சிம்ரன் உங்களால் முடியும். நீங்கள் மக்களின் மீது அதிக அக்கறை கொண்டவர் என்பது எனக்கு நன்றாக தெரியும். கேடு செய்பவர்கள் மீதும் அக்கறை காட்டுகிறீர்கள் என கூறினார். தன் மீது சுமத்தப்பட்ட கொலைக்குற்றத்தை எல்விஸ் மறுத்ததால் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.