Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதலனை கொன்றுவிட இவங்கள ஏவி விட்ட காதலி…. புதருக்குள் மடக்கி பிடித்த காவல்துறையினர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

நெல்லையில் கூலிப்படையினருக்கு வெடிகுண்டு வழங்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டிலிருக்கும் மலைப் பகுதிகளில் கூலிப்படையினர் நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாளுடன் சுற்றித் திரிந்ததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கல்லூரி மாணவி தனது காதலனை கொன்று தீர்த்துவிட கூலிப்படையை அனுப்பிய விவகாரம் தெரியவந்துள்ளது.

இதனிடையே கூலிப்படையினருக்கு வெடிகுண்டு எவ்வாறு கிடைத்தது? என்பதனை காவல்துறையினர் விசாரித்து வந்தனர். அதில் அவர்களுக்கு கோவில்பட்டியை சேர்ந்த பெருமாள்பாண்டி என்ற வாலிபர் கொடுத்த விவகாரம் வெளியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |