உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள இளம் பெண் ஒருவர் அவரது உறவினர் பையனான தீபக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த இளம் பெண் தீபக்கின் உறவினர்கள் அவர்களது திருமணத்திற்கு மறுப்பதாக கூறி ராட்சத தண்ணீர் தொட்டி மீது ஏறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணை சமாதானப்படுத்தி கீழே இறக்கியுள்ளனர். காதலனை கரம் பிடிக்க குடும்பத்தினர் இடையூறாக இருப்பதாக கூறி வாட்டர் டேங்க் மீது ஏறி இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Categories