அமெரிக்காவில் காதலனை தன் நாயுடன் பார்க்கச் சென்ற பெண் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்த Sinéad Lyons என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் செல்லப் பிராணியான நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். Sinéad Lyons இரண்டு வாரங்களுக்கு முன் தன் நாயுடன் காதலனை பார்க்க போவதாக அவர் தோழியிடம் கூறி விட்டு சென்றவர் நியூ ஹாம்ப்ஷயர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 26 ஆம் தேதி பகல் 2.30 மணியளவில் காவல்துறையினருக்கு பொதுமக்கள் ஏரியில் சடலம் மிதப்பதாக தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல்துறையினர் கடும் பனியால் உறைந்த ஏரியில் அவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினர்.