Categories
உலக செய்திகள்

காதலனோடு இருந்த பெண்…! உற்றுப் பார்த்தபோது ஷாக்…. நடந்த பரபரப்பு சம்பவம் …!!

அமெரிக்காவில் தனது காதலன் ஃபேஸ்புக்கில் வேறொரு பெண்ணுடன் இருப்பதை கண்ட காதலி அந்த பெண்ணின் கையில்  திருமண மோதிரத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அமெரிக்காவில் போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான ஜோசப் டேவிஸ் என்பவர் இரண்டு பெண்களை ஏமாற்றி தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை தேடுவதற்கு இரண்டு பெண்களும் போலீசுக்கு  உதவ முன்வந்துள்ளார்கள். அமெரிக்காவில் தனது காதலனுடன் ஃபேஸ்புக்கில் வேறொரு பெண்ணின் புகைப்படம் இருப்பதை கண்ட காதலி அந்தப்பெண்ணின் கையில் தனது திருமண மோதிரம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அமெரிக்காவில் ஆரஞ்சு சிட்டி என்ற இடத்தில் வாழும் இந்த பெண்ணிடம் தன்னை ஜோ பிரவுன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு காதலித்துள்ளார்.

மேலும் இவரிடமிருந்து திருமண மோதிரம் மற்றும் சுமார் 6,270 டொலர்கள் மதிப்புடைய நகைகளையும் கொள்ளை அடித்துள்ளார். இந்த பெண் இதுபற்றி பேஸ்புக்கில் தன் காதலனுடன் இருந்த அந்தப்பெண்ணிடம் கூறும் போதுதான் இன்னும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒர்லாண்டோவில் வாழும் அந்த  பெண்ணிடம் தன்னை ஜோசப் டேவிஸ் என்று அறிமுகப்படுத்தியுள்ளார் .மேலும் தன் முதல் காதலியின் மோதிரத்தை வைத்துதான் இவருக்கு ப்ரொபோஸ் செய்துள்ளார். இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் ஜோசப் டேவிசை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |