Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதலன் இறந்த துக்கம்….. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் மதுரையில் வசிக்கும் பிரபு என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். கடந்த மாதம் பிரபு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த திவ்யா மன உளைச்சலில் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |