கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு காதலன் கொடுத்த பரிசால் காதலியின் குடும்பமே சிதறிப்போயுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த காதலன் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தன் காதலிக்கு டிஎன்ஏ கிட்டை பரிசாக அளித்துள்ளார். அந்தப் பெண்ணும் டிஎன்ஏ கிட்டை வைத்து அவரின் உறவுகளை தேடி பார்த்துள்ளார். அப்போது அப்பெண்ணுக்கு ஒன்று விட்ட தங்கை ஒருவர் உள்ளதாக அந்த கிட் மூலம் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காதலுடன் போனில் பேசி கொண்டிருக்கும்போதே போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டு “அம்மா எனக்கு ஒன்றுவிட்ட தங்கை யாரும் இருக்கிறார்களா” என்று கேட்டுள்ளார் அந்த காதலி.
முதலில் அதெல்லாம் யாரும் இல்லை என்று அவரின் தாய் சிரித்து உள்ளார். பின்பு 30 வருடத்திற்கு முன்பு நடந்த ரகசியத்தை ஒரு குடும்பமே தான் பேசிக்கொண்டு இருப்பதை அறியாமல் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, நான் உன் அப்பாவிடம் சண்டை போட்டுக்கொண்டு இரண்டு நாட்கள் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டேன். அப்போது என் முன்னாள் காதலரை சந்தித்தேன். அவருடன் சில நாட்களை செலவிட்டேன். அப்போதுதான் நான் கர்ப்பமானேன்.
பின் நடந்தவற்றை உன் அப்பாவிடம் மறைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார். அதாவது அந்தக் காதலியின் தந்தை வேறு யாருடைய குழந்தையையோ தன் குழந்தையாக நினைத்து வளர்த்து வந்துள்ளார் என்பது இந்த கிட்டின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் தான் கொடுத்த டிஎன்ஏ கிட் பரிசால் தன் காதலியின் குடும்பமே வெடித்து போனதால் அந்த காதலன் மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம். மேலும் அந்த காதலியின் குடும்பம் என்ன ஆகியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.