Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் “மீண்டும்” பயங்கர சம்பவம்…. கல்லூரி மாணவியின் மர்மமான மரணம்…. விஷம் கொடுத்து கொலையா….???

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாவறை புளியறத்தலை பகுதியில் சின்னப்பர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூன்றாவது மகள் அபிதா களியக்காவிளை பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 1-ஆம் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்ட அபிதாவை பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபிதா கடந்த 5-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக அபிதாவின் தாய் தங்கபாய் நித்திரவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நித்திரவிளை பகுதியில் வசிக்கும் வாலிபர் கடந்த 2 ஆண்டுகளாக எனது மகளை காதலித்து வந்தார். ஆசை வார்த்தைகள் கூறி எனது மகளை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார். ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் எனது மகள் மன உளைச்சலில் யாரிடமும் பேசாமல் இருந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி அந்த வாலிபர் எனது மகளை தனிமையில் சந்தித்து பேச வேண்டும் எனக் கூறி அழைத்து சென்ற பிறகு தான் எனது மகளின் உடல்நிலை மோசமானது. அவர் குளிர்பானத்தில் மெல்ல மெல்ல கொல்லும் விஷத்தை கலந்து எனது மகளுக்கு கொடுத்திருக்கலாம் என சந்தேகப்படுகிறேன். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். நேற்று திருவனந்தபுரம் மருத்துவமனையில் அபிதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டதால் மெல்ல மெல்ல கொல்லும் விஷத்தை கலந்து கொடுத்திருக்கலாம். இதனால் அபிதாவின் உடல்நிலை மோசமாகி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அபிதாவின் காதலன் தற்போது பெங்களூரில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். அவரை பிடித்து விசாரித்தால் உண்மை தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |