Categories
மாநில செய்திகள்

காதலர்களே உஷார்…!! நாளை(பிப்..14) இப்படி செய்தால்…. கடும் நடவடிக்கை…. போலீஸ் எச்சரிக்கை….!!!!

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கட்டிப்பிடி தினம், இன்று முத்தத் தினத்தை தொடர்ந்து நாளை (பிப்ரவரி 14) காதலர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த காதலர் தினத்தை முன்னிட்டு நாளை (பிப்ரவரி 14) கன்னியாகுமரி கடற்கரைக்கு வரும் காதலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இதன் காரணமாக காதலர்கள் மறைவான இடங்களுக்கு சென்று அத்துமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதேபோன்று சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், காதலர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |