இங்கிலாந்தில் 70 வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதி ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் கட்டாயம் ஒருவர் மீது காதல் கொண்டு இருப்பார்கள். அவர்கள் மீது உள்ள அன்பை பல சமயங்களில் வெளிப்படுத்துவார்கள். அதிலும் குறிப்பாக தம்பதியினரிடையே இருக்கும் அன்பை சாகும்வரை பிரியாது. அதிலும் சிலர் சாகும்போது ஒன்றாகவே சாக வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
இங்கிலாந்தில் 70 வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்த மார்க்ரெட்- டெரிக் இஃபிரித் தம்பதி கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இறப்பதற்கு முன்பாக இருவரும் கைகோர்த்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, “மரணித்தது இரு இதயங்கள்” என்ற ஹேஸ்டேக்கை இணையதள வாசிகள் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.