Categories
தேசிய செய்திகள்

காதலர் தினத்தன்று…. இப்படியொரு சம்பவமா….? கேரளாவை வியக்க வைத்த திருநங்கைகள்…!!!!

கேரளாவில் காதலர் தினத்தன்று திருநங்கைகள் 2 பேர்  திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உலக காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று கேரள மாநிலத்தை சேர்ந்த திருநங்கைகள் சியாமா எஸ் பிரபா, மனு  கார்த்திகா இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள்.

இதை உறவினர்கள், குடும்பத்தினருக்கு  கூறியதற்கு அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தங்களது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்வதற்காக நீதிமன்றத்தில் மனு செய்து அதற்கான அனுமதியை பெற உள்ளதாக பூரிப்பு பொங்க கூறினர்.காதலர் தினத்தன்று  இளைஞர் தங்களின் மனம் கவர்ந்தவரிடம்  காதலை வெளிப்படுத்துவது வழக்கமாக  ஒன்றாகும். ஆனால் அன்றைய தினத்தில் திருநங்கைகள் இருவரும் திருமணம் செய்து கொள்வது என்பது மிக சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது.

Categories

Tech |