கணவர் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ஒரு காதல் பாடலை இயக்கும் வேலைகளில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த பாடலுக்காக அவர் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் உள்ள சித்தாரா ஹோட்டலில் தங்கி இருக்கிறார். நடிகர் தனுசும் வாத்தி படத்தின் படப்பிடிப்புக்காக அந்த ஹோட்டலில்தான் தங்கியிருக்கிறார். ஐஸ்வர்யா இந்த பாடலை காதலர் தினத்தில் வெளியிடுவார் என கூறப்படுகிறது. ஆசையாசையாய் காதலித்து திருமணம் செய்துகொண்ட தன்னுடைய 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துவிட்டு, தற்போது காதல் பாடலை இயக்க வேண்டும் என்பது சற்று கடினமான விஷயம்தான்.
அந்த பாடலை இயக்கும் போதெல்லாம் ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் குறித்த நினைவுகள் வரலாம். அதை எல்லாம் தாண்டி ஒரு பெண்ணால் சாதிக்க முடியும் என அவர் இந்த பாடலை இயக்குவது பெருமைப்படக் கூடிய ஒரு விஷயம் தான் என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இருவரையும் எப்படியாவது பேசி சேர்த்து வைத்துவிட வேண்டும் என்ற முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.